தலித், பழங்குடிகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தால் வன்கொடுமைச் சட்டம் பாயும்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை உத்தப்புரம் பகுதிகளில் தலித்துக்கள் கோயில்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பகுதிகளிலில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் தலித்துகள்-பழங்குடிகளில் கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் உத்திர பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த ஒரு தலித் பெரியவர் எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், திருத்தப்பட்ட வன்கொடுமைச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலித்-பழங்குடிகளின் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதா பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்படி…

* தலித்-பழங்குடியினரை பொது வெளியில் சாதி பேர் சொல்லிப் பேசினால் வன்கொடுமைச் சட்டம் அவர்கள் மேல் பாயும்.

* தலித்-பழங்குடியினருக்கு  கோயிலில் நுழைய, வழிபட அனுமதி மறுக்கப்பட்டால் வன்கொடுமை சட்டத்தில் அவர்கள் மேல் வழக்குத் தொடுக்க முடியும்.

* மனித கழிவுகள், விலங்குகளின் கழிவுகளை அள்ள வற்புறுத்தினாலோ பணிக்கு அனுப்பினோலோ இந்தச் சட்டப்படி தண்டிக்க முடியும். 1993-ஆம் ஆண்டிலேயே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தாலும் தற்போது மீண்டும் இந்தச் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.