மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி திமுக சார்பில் டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அலங்காநல்லூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் கென்னடி கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலர்கள் மூர்த்தி, மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரந்தாமன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.