#BeepSong-இளையராஜா: கடவுளை குறித்த கடைசிப் பதிவு

பாபுராஜ்

Baburaj
பாபுராஜ்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார். தேசிய அவமானம். அந்த நிகழ்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பிரபலங்களிடம் கேட்கிறார்கள். இது அந்த பிரபலங்களை அவமானப்படுத்தும் செயல் என்று சொல்ல முடியுமா? ஒரு சீரழிவு, அதனைப் பற்றி – பிரபலங்கள் என்பதால் – அவர்களிடம் கேட்கிறார்கள், அவ்வளவுதான். பீப் பாடலும் ஒரு சீரழிவு. இளையராஜா புழங்கும் அதேதுறையில் இருக்கும் இருவர் செய்த வேலை அது என்றவகையில், அந்தப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒருவர் கருத்து கேட்கிறார். இதில் எங்கு இளையராஜா அவமானப்படுத்தப்படுகிறார்? வைகோ கருத்து சொல்கிறார், தமிழருவி மணியன் சொல்கிறார், புலமைப்பித்தன் தொடங்கி சினேகன், பா.விஜய்வரை கருத்து சொல்கிறார்கள், தாமரை ஒரு பதிவே போடுகிறார். இவர்கள் எல்லாம் கருத்து சொல்கிற ஒரு விஷயம் குறித்து இளையராஜாவிடம் கேட்வி கேட்பதே அபச்சாரம் என்பதுதான் புரிந்து கொள்ள இயலவில்லை. நாங்க மட்டும்தான் கருவறைக்குள் நுழைவோம், சாமியை நாங்க மட்டும்தான் தொடுவோம் என்று சொல்லும் பார்ப்பன ஆச்சாரத்தைவிடவும் இந்த புனிதவட்டம் ஆபாசமாக உள்ளது. இளையராஜா ஓர் இசை மேதை என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் திரை வரலாற்றில், தமிழக மக்களிடம் அழுத்தமான பாதிப்பை உருவாக்கிய கலைஞர்களில் அனைவரையும்விட முதலிடத்தில் இருப்பவர் இளையராஜா என்பதே என்னுடைய அபிப்ராயம். இதில் இப்போதுவரை மாற்றமில்லை.

ஆனால், அவரை ஒரு புனித பீடமாக்கி வழிபட ஆரம்பிக்கும் போதுதான், தமிழர்களின் மிகையான தனிமனித வழிபாடு என்ற நோய்க்கூறின் மீது அருவருப்பு உண்டாகிறது.

இளையராஜா எப்படி ஒரு இசை மேதையோ, அதே அளவுக்கு, சாதாரணர்களிடமிருந்து தன்னை துண்டித்துக் கொண்டவர். அவரது பாடல்கள் எடுபடாமல் போன பிறகே அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு வர ஆரம்பித்தார், பேட்டிகள் தரத் தொடங்கினார். நான் உங்களில் ஒருவன் அல்ல, உங்களைவிட மேலானவன் என்ற அகந்தை எப்போதுமே அவரிடம் உண்டு. இசை மேதை என்பதால் வந்த அகந்தை என்றால்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆன்மீக ஞானி, ஐம்புலனையும் அடக்கி, பணம், புகழ் என்ற இச்சாசக்திகளை கடந்தவன் என்ற செருக்கு அது. அவரே மயக்கம் கொள்ளும் போலியான பிம்பம் அது.

தனது நூல் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, ஐம்புலன்களை வெற்றி கொண்டவர் ரமண மகரிஷி. ஏசுவும், புத்தரும் உடல் வலியை பொறுக்க முடியாமல் கதறியிருக்கிறார்கள். ரமண மகரிஷி புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மயக்க மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. உடம்பை வெற்றி கொண்டவர் என்றவகையில் ஏசு, புத்தரைவிட அவர் மேலானவர் என்றார். அதேவிழாவில் பேசிய வாலி, ‘இதோ இருக்கிறார் பாரு ஒரு ரமண மகரிஷி’ என்று இளையராஜாவை ரமண மகரிஷியாக சித்தரித்து மேடையில் பேசினார். இளையராஜா பெரும் உவகையுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

பகை, கோபம், அகந்தை என்ற எந்த உணர்ச்சியையும் விட்டொழிக்காமல், இவை அனைத்தையும் கடந்த ஞானியின் இடத்தை அவர் தொடர்ந்து கேட்டபடி இருக்கிறார். அனைத்தையும் கடந்த ஞானி என அவர் தன்னை நம்புகிறார்.

illayaraja 2

அந்த நம்பிக்கையில் மற்றவர்கள் அனைவரையும் அவர் சாதாரணர்களாக, தன்னைவிட கீழானவர்களாக நினைக்கிறார். ‘சாதாரணர்களிடம் கேட்கிற கேள்வியை என்கிட்ட எப்பிடிய்யா கேட்பே’ என்ற கோபத்தில் வந்ததுதான் ‘அறிவிருக்கா?’ என்ற கேள்வி. மற்றபடி அவரது பக்தர்கள் சொல்வது போல் எல்லாம், வெள்ள பாதிப்பைப் பார்த்து கனத்துப்போன நெஞ்சத்தால் வந்ததில்லை. அப்படியிருந்தால், பாதிக்கப்பட்டவனைப் பார்த்து, இறைவன்தான் உன் மனிதநேயத்தை வெளிக்கொணர வெள்ளத்தை அனுப்பினார் என்பாரா? வெள்ளத்தில் செத்துப் போனவனும், சொத்தை இழந்தவனும் மனிதநேயம் இல்லாதவர்களா? சந்தர்ப்பம் தெரியாமல் இதுபோன்ற தத்துவ உளறல்களை கொட்டும் இளையராஜாவை கண்டிப்பதைவிடுத்து, பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரின் மீது ஏறுகிறார்கள். தன்னை ஆன்மீக ஞானியாக காட்டிக் கொள்ள அவர் சொல்லும் ஆன்மீக தத்துவ விசாரங்கள் சகிக்க முடியாதவை. பாதிக்கப்பட்டவனிடம் போய், இறைவன்தான் உன் மனிதநேயத்தை வெளிக்கொணர வெள்ளத்தை அனுப்பினான் என்பது போன்ற அசட்டுத்தனங்கள் அவை. ஆவியின் எழுப்புதல் கூட்டத்தில் மக்களை குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கும் டுபாக்கூர்களின் பேச்சுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?.

அவர் இசை மேதை என்பதற்காக அவரது பக்தர்கள் அவரது அசட்டு தத்துவங்களையும், நானே எல்லாம் என்ற அவரது நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ளலாம், கொண்டாடலாம். அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், பொதுவெளியில் புனிதப்படுத்தப்பட்ட கேள்விகளை மட்டுமே அவர்முன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் பாசிஸம்.

இதில் முக்கியமான விஷயம், இளையராஜாவை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்களில் பெரும்பாலோர், அவரை கண்மூடித்தனமாக கொண்டாடுகிறவர்களைவிடவும் தீவிரமான இளையராஜா விசிறிகள். கலை வேறு கர்வம் வேறு மக்களே.

பாபுராஜ், திரை எழுத்தாளர்.

 

2 thoughts on “#BeepSong-இளையராஜா: கடவுளை குறித்த கடைசிப் பதிவு

  1. இசைஞானி மீதான உனது காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாக தெரியுது. BLOG -ல எழுதுறவனெல்லாம் பெரிய அப்பாடக்கர்ன்னு அவனவன் நெனச்சிக்கிறான். கடைய மூடு…

    Like

  2. Hi I enjoyed your blog but its nothing but your inability to accept/digest a right reaction from a noble person who tried to help a bit by helping the handicapped people by going himself in a boat with food and supplies.Unfortunately you or no one in this world has the right to comment on his reaction because the question asked was bullshit, especially at that situation.If you use your brain rightly you will understand.Even I will answer in the same way to that low life reporter. I think you don’t respect your father or mother..don’t try cheap publicity…I am sorry for you…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.