1972-ஆம் ஆண்டு சதாம் உசேனின் உறவினர் அசன் அல் பகர் ஈராக்கில் ஆட்சிக்கு வந்தபோது, அழகிப் போட்டிகளுக்கு தடை செய்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கில் தற்போது அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது.
வழக்கம்போல அடிப்படைவாதிகள் அழகிப் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரச்சினை ஒருபுறம் இருக்க, இரண்டு முறை அழகிப் போட்டி நடக்கும் இடம் மாற்றப்பட்டது.

இரண்டு பேர் மிரட்டலுக்கு பயந்து அழகிப் போட்டியிலிருந்து பின்வாங்கிய நிலையில் இறுதியாக ஷைமா குஸம் என்ற 20 வயதான பெண் மிஸ் ஈராக் பட்டத்தை வென்றார். இவர் உலகளவில் நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஈராக் சார்பில் கலந்துகொள்வார்.