தமிழக வெள்ளத்தால் 14 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகளான கிண்டி, ஈக்காடு தாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம் ஆகியவையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தொழிற்பேட்டையும் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, சனிக்கிழமை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “இந்த நிறுவனங்களில் பெரும்பால நிறுவனங்கள் எந்தவித இன்ஸ்யூரன்ஸும் செய்யவில்லை. வெள்ளத்தால் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை உடனடியாக ஈடுகட்ட முடியாத நிலையில் அவர்களுடைய பொருளாதார நிலைமை இருக்கிறது. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.