விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?

கடந்த வாரம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், “மக்கள் நலக் கூட்டணி ஊழல் கறைபடியாத கட்சிகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் செயல்பாடுகள் மெச்சும்படி இருக்கின்றன” என்று பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, “தேமுதிக தலைவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்” என மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இதேபோல் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

வழக்கம்போல மவுனம் காத்தார் விஜயகாந்த். “விஜயகாந்தின் கணக்கு பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இதுவரையில் தான் கூட்டணியில் சேரப்போகிறோம் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்றி வைத்திருப்பது பணமுள்ள கட்சிகளிடம் பேரம் பேசத்தான். மற்றபடி மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து பொருளாதார இழப்பை சந்திக்கவெல்லாம் அவர் தயாராக இல்லை” என்று விஜயகாந்தின் கூட்டணி கணக்குப் பற்றி பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

vijayakanth

“வைகோவுக்கு விஜயகாந்தை தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அழைக்க திட்டம் இருந்தது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் அறிவிக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டனர். அதனால் நீங்கள் தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எனச் சொல்லி விஜயகாந்தை அழைக்கவும் முடியாது” என்றும் சொன்னார் அவர்.

தனக்கு எந்தவகையில் பயன்படாத மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர யோசிப்பதாகவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

திமுகவுக்கு பிடி கொடுக்காமல் தேமுதிக இழுத்தடிப்பதால் இப்போதைக்கும் விஜயகாந்தை அழைப்பதில்லை என்கிற முடிவில் ஸ்டாலின் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

DMDK Ponnar

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சனிக்கிழமை விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருக்கிறார். பாஜக தரப்பில் யாரை முதல்வர் வேட்பாளராக ஏற்பது என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் நகர்வு அமைந்துள்ளது.

அதாவது தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வராகவும் பாஜகவிலிருந்து ஒருவரை துணை முதல்வராகவும் உடன்படிக்கை செய்துக் கொண்டு தேர்தலில் இறங்கலாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக இருப்பதாகவும் அதற்காக என்ன ‘விலை’ வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 thoughts on “விஜயகாந்துடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.