#அவசியம் படியுங்கள்: கர்நாடக மாநிலத்தில் அணு ஆயுத நகரம்!

கர்நாடக மாநிலத்தின் தென் மாவட்டத்தில் உள்ள செல்லகெரே என்ற கிராமத்துக்கு அருகே பல ஆண்டுகளாக இந்திய அரசு அணு ஆயுத நகரத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வு செய்தியை வெளியிட்டிருக்கிறார்  பத்திரிகையாளர் அட்ரியன் லெவி. இந்த புலனாய்வு செய்தி தொடர் கட்டுரையாக  ஹஃப்பிங்டன் போஸ்ட் இணைய இதழில் வந்துள்ளது.

இந்தக் கட்டுரையில் அணு ஆயுத தயாரிப்பில் முனைப்பு காட்டி வரும் சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அணு ஆயுத நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2017-ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் நிறைவுறும் என்றும் இந்த நகரத்தில் அணு சக்தி ஆய்வகங்கள், அணுஆயுதங்கள் தாங்கிய ராக்கெட்டுகளை சோதிக்க தனிப்பட்ட இடங்கள் என பல வசதிகள் செய்யப்பட உள்ளன எனவும் லெவி தெரிவிக்கிறார்.

செல்லகெரே பகுதியில் நடந்துவரும் பணிகள்..
செல்லகெரே பகுதியில் நடந்துவரும் பணிகள்..

 

இந்தியாவின் அணு ஆயுத ஆய்வை மேம்படுத்தவும் இந்தியாவில் இயங்கும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை உற்பத்தி செய்வதும் நீர்மூழ்கி ஆயுதங்களை உருவாக்கவும் இந்தத் திட்டம் வழிகோளும் என்றும் இந்தக் கட்டுரை சொல்கிறது.

இந்தியாவிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிகளவில் இருப்பது சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்கக்கூடும் என்று ஓய்வுபெற்ற இந்திய அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகவும் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் லெவி.

இந்தியா ஏற்கனவே 4,914 டன் யுரேனியத்தை ஃபிரான்ஸ், ரஷ்யா, கசகஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து வாங்கி குவித்துள்ளதாகவும், செப்டம்பர் 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடமிருந்து நீண்ட காலத்துக்கு யுரேனியத்தை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளதையும் தனது புலனாயவுக் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.