சிம்பு- அனிருத் கூட்டணியில் உருவான பீப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் புதுகை அனைத்து கலை இலக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் இந்தப் போராட்டம் நடக்கிறது.
சிம்பு – அனிருத் இருவரும் ஊடகங்களில் தோன்றி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்; மறுத்தால் திரைப்படம், இணைய ஊடகங்களில் இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை. புதுகை மக்களைத் திரட்டிப் போராட 1000 நோட்டீசு அச்சடித்து மக்களிடையே விநியோகித்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.