முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் என்ன பேசினார்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து வாட்ஸ் அப் மூலம் மக்களிடையே பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை இங்கே தருகிறோம்…

வணக்கம். உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.

கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.

கவலை வேண்டாம். இது உங்கள் அரசு ; எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டுப் புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.

போர்க் கால அடிப்படையில் மீட்புப்பணிகளையும் நிவாரணப் பணிகளையும், புனரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்களும் அரசு அலுவலர்களும் காவல் துறையினரும் முப்படையினரும் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் கடுமையாக உழைத்தார்கள்.

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்.

என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கின்ற ‘அம்மா’ என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த அரசு, இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டுவேன். எத்துயர் வரினும், அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.

2 thoughts on “முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் என்ன பேசினார்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.