பயிற்சி பெற்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த ஆணையை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.
கடந்த 1971ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு, பாரம்பரிய முறைப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கு மாறாக, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பிறகு 2006 – ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் மீண்டும் சில திருத்தங்களுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின் சட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழக்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும் ஆகம விதிகளை கடைப்பிடித்தே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
5 thoughts on “தமிழக அரசின் ஆணை நிராகரிப்பு: ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் நடக்க வேண்டும்: உ.நீ”