முன்னாள் இந்திய பிரதமர்களை கவுரவிப்பதில் பாராமுகமாக இருந்துவருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. நவம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்ட ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் அவருடைய படத்தைக் கூட மத்திய அரசு பிரசுரிக்கவில்லை. வெறுமனே குழந்தைகள் தின வாழ்த்து என்று மட்டுமே அரசு விளம்பரம் சொன்னது.
அதுபோலத்தான் வியாழக்கிழமை(19-11-2015) இந்திரா காந்தியின் பிறந்த நாளிலும் அரசு விளம்பரங்களில் இந்திராவின் முகம் தவிர்க்கப்பட்டது.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக உண்மையாக பாடுபட்டவர் இந்திரா காந்தி
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திராவின் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடியது. டெல்லியில், இந்திராவின் பிறந்த நாளை ஒட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் தலைமையேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக உண்மையாக பாடுபட்டவர் இந்திரா காந்தி என புகழாரம் சூட்டினார்.